×

வெள்ளத்தால் திக்குமுக்காடும் தென்மாவட்டங்கள்: ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!

தூத்துக்குடி: தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொது போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருசில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை பொறுத்தவரை, சூழலை பொறுத்து தேவைக்கு ஏற்ப இயக்கப்படும் என இன்று காலை அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினால் பயணிகளுக்கும், பேருந்துகளும் பாதுகாப்பு இல்லை என்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. மழை பாதித்த 4 மாவட்டங்களுக்கு தினசரி 300 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் வடிந்த பிறகு பேருந்து சேவை மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளத்தால் திக்குமுக்காடும் தென்மாவட்டங்கள்: ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : SOUTHERN ,OMNI BUS OWNERS ASSOCIATION ,OMNI BUSES ,Tuticorin ,Tirunelveli ,Flood Enforcement South Districts ,Dinakaran ,
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!