×

கொடைக்கானலில் விடிய விடிய கனமழை: பெரியாற்று ஓடைகளில் காட்டாற்று வெள்ளம்

திண்டுக்கல்: மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக கொடைக்கானலில் நேற்று மாலை கனமழையானது பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழை தொடர்ந்து 10 மணிநேரத்தில் 10 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

அருவிகள், நீரோடைகளில் வெள்ளம்:

கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது 10 செ.மீ மழை பதிவாகியதால் கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமல்லாது அதனை சுற்றி இருக்கக்கூடிய ஏராளமான மலை கிராமங்களில் விவசாயப்பணிகள் முழுமையாக முடங்கியது. மலைப்பகுதியில் இருக்ககூடிய நீரோடைகள் மற்றும் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் பெய்யும் மழையானது வெள்ளி நீர்வீழ்ச்சி வழியாக பெரியாற்று ஓடை, சேத்துபாறை வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கீழ்மலை, மேல்மலை மக்கள் கோரிக்கை

கொடைக்கானல் கீழ்மலை மற்றும் மேல்மலை உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மண்ணவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்வதால் அந்த அப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டும், கீழ்மலையில் நிலச்சரிவு, மரம் விழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொடைக்கானல், கனமழை, பெரியாற்று ஓடை, காட்டாற்று வெள்ளம்

The post கொடைக்கானலில் விடிய விடிய கனமழை: பெரியாற்று ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Periyartu ,Dindigul ,Meteorological Department ,Western Ghats ,Periyaru ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல்:உள்ளூர் மக்கள் இபாஸ் பெறுவதில் சிக்கல்