×

வரலாறு காணாத கனமழையால் தத்தளிக்கும் நாகர்கோவில்; வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மக்கள் தவிப்பு..!!

குமரி: நாகர்கோவிலில் வரலாறு காணாத கனமழையால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் சுற்றுவட்டார பகுதிகளில் மிகுந்த பாதிப்புக்குளாகியது. குறிப்பாக மீனாட்சி கார்டன் பகுதியில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு மழைநீரானது வீடுகளை சுற்றி கடல் போல் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வரும் சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகு மூலம் பால், பிரட், ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர்.

இடுப்பளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரால் அப்பகுதி மக்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் சிக்கியுள்ள மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் காரைக்கால் மடம், கூட்டுவாய்மடம் பகுதியில் தீயணைப்புத் துறையினர் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காணமாக கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரலாறு காணாத கனமழையால் தத்தளிக்கும் நாகர்கோவில்; வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மக்கள் தவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Kumari ,Nagarkovo ,Kanyakumari district ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில்...