×

பத்தாண்டுகளுக்கு முன்பு இல்லாத அளவிற்கு நீரிழிவு நோயின் தீவிரம் அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை சார்பில் நீரிழிவு வராமல் தடுப்பது குறித்து சென்னையில் 100 இடங்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் 100 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வாகனத்தில் நீரிழிவுக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உணவுமுறை நிபுணர்கள் இருப்பார்கள். இந்த நடமாடும் வாகனத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

புற்று நோய்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இருக்கின்ற அளவிற்கு நீரிழிவு நோய் பற்றியோ மற்ற நோய்கள் பற்றியோ மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. காவேரி மருத்துவமனை இதனை முன்னெடுக்கும் வகையில் நூறு நாட்கள் நூறு இடங்களில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. வாழ்கையில் மன அழுத்தம், துரித உணவுகள், இயந்திரத்தனமான வாழ்க்கை போன்றவற்றால் சென்னையில் பத்தாண்டுகளுக்கு முன்பு இல்லாத அளவிற்கு இன்றைக்கு சர்க்கரை நோயுடைய தீவிரம் அதிகரித்து இருக்கிறது.

ஒரே இடத்தில் எல்லா வசதிகளையும் செய்வதற்கான புதிய முயற்சியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் இந்த நோயை வராமல் தடுக்க வேண்டும், வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் கடைசியாகத்தான் மருந்து உட்கொள்வதை பெற வேண்டும் ஆனால் இதில் மருந்து எடுத்துக் கொள்வது தவறான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பத்தாண்டுகளுக்கு முன்பு இல்லாத அளவிற்கு நீரிழிவு நோயின் தீவிரம் அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Commissioner ,Radhakrishnan ,Chennai ,Kaveri Hospital ,Alwarpet, Chennai ,
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...