×

3 பணய கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றது குறித்து விசாரணை: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

டெய்ர் அல்- பலா: பணய கைதிகள் 3 பேரை சுட்டு கொன்ற விவகாரத்தில், இஸ்ரேல் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் நிலையில் அது குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என வாரம் இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் போரில் இதுவரை 18,700 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.ஏராளமான நகரங்களில் உள்ள குண்டுவீச்சில் தரைமட்டமாகி உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை, காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்திருந்த பணயகைதிகள்,3 பேரை இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக சுட்டுக்கொன்றது. சம்பவம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த சம்பவத்தையடுத்து,10 வாரங்களாக நீடிக்கும் போரில் இஸ்ரேல் ராணுவத்தின் நடத்தை குறித்து கேள்வி எழும்பியுள்ளது. ஏற்கனவே, காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில்,பணய கைதிகள் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் போரில் இஸ்ரேல் ராணுவத்தின் நடத்தை குறித்து மக்களிடையே அச்சத்தை எழுப்பியுள்ளது.  இதற்கிடையே, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இந்த வாரம் இஸ்ரேல் செல்கிறார். காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, பாலஸ்தீனத்தின் மக்கள் தொகையில் 85 % தங்கள் வீடு, உடமைகளை இழந்து வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.

The post 3 பணய கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றது குறித்து விசாரணை: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Israel ,Deir Al-Bala ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...