×

திருப்பதி கோயிலில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தரிசனம், ஆர்ஜித சேவை டிக்கெட் பெற தேதிகள் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024ம் ஆண்டில் மார்ச் மாதம் சுவாமி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்ச் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தோமலை, அர்ச்சனை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் தேர்தெடுக்க வரும் 18ம் காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். பின்னர் 20ம் தேதி 12 மணிக்கு பிறகு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு குறுந்செய்தி மூலம் தேவஸ்தானம் அனுப்பும் லின்க்கில் சென்று பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.

இதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் & சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகளுக்கு வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மார்ச் மாதம் ஏழுமலையான் கோயில் தெப்பகுளத்தில் நடைபெறும் தெப்பல் உற்சவத்திற்கான டிக்கெட் வரும் 21ம் ேததி காலை 10 மணிக்கும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான ஆன்லைன் சேவைக்கு (சேவையில் பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்) வரும் 21ம் தேதி மதியம் 3 மணிக்கு பதிவு செய்யலாம்.

மார்ச் மாதம் அங்கப்பிரதசட்ணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் 23ம் தேதி மதியம் 3 மணிக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான தரிசனம் மற்றும் தங்குமிடம் ஒதுக்கீடு 23ம் காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25ம் தேதி காலை 10 மணிக்கும், ஓய்வறைகள் முன்பதிவு 25ம் தேதி மதியம் 3 மணிக்கும் முன்பதிவு செய்யலாம். அதேபோல் வரும் 27ம் தேதி ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்களாக சேவை செய்வதற்கான ஆன்லைன் பதிவு காலை 11மணிக்கும், வெண்ணெய் உற்பத்தி செய்யும் நவநீத சேவைக்கும் மதியம் 12மணிக்கும், உண்டியல் காணிக்கை எண்ணும் பரகாமணி சேவைக்கு மாலை 3 மணிக்கும் முன்பதிவு செய்யலாம். மேற்கண்ட சேவைகளுக்கு https://ttdevasthanams.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் ெதரிவித்துள்ளது.

The post திருப்பதி கோயிலில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தரிசனம், ஆர்ஜித சேவை டிக்கெட் பெற தேதிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Darisana ,Arjita ,Tirupathi Temple ,Swami ,Tirupathi Elumalayan Temple ,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...