×

பணி காலத்தில் மது அருந்திய விவகாரம் ஆல்கஹால் சோதனை தேர்வில் 1,761 லோகோ பைலட் தோல்வி: ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: மது அருந்தியதை கண்டறியும் ஆல்கஹால் சோதனை தேர்வில் 1,761 லோகோ பைலட்கள் தோல்வி அடைந்ததாக ஒன்றை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடு முழுவதும் ரயில்களை இயக்குபவர்களை ‘லோகோ பைலட்’ என்று அழைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச்செல்லும் ரயிலை ஓட்டிச் செல்லும் லோகோ பைலட் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. இதனால், அவர்களுக்கு ப்ரீதலைசர் (breathalyzer) எனப்படும் சோதனை (மது அருந்தும் பழக்கம்) நடத்தப்படுகிறது.

இந்த சோதனையின்படி, லோகோ பைலட்களின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு பரிசோதிக்கப்படும். இந்த சோதனையில் அவர்கள் ரத்தத்தில் எந்தளவு ஆல்கஹால் உள்ளது என்பது கண்டறியப்படும். ஒரு நிமிடத்தில் நடக்கும் இந்த சோதனையில் நான்கு விதமான முடிவுகள் உள்ளது. ஜீரோ, தேர்ச்சி, எச்சரிக்கை மற்றும் தோல்வி ஆகும். இந்த தேர்வில் தோல்வி அடைபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதியாகும். இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அதிர்ச்சிகரமான பதில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரயில் ஓட்டுனர்களான லோகோ பைலட்களுக்கு நடத்தப்பட்ட ‘ப்ரீதலைசர்’ சோதனை தேர்வில் 1,761 லோகோ பைலட்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

அவர்களில் பயணிகள் ரயிலின் லோகோ பைலட்கள் 674 பேர், சரக்கு ரயில்களின் லோகோ பைல்கள் 1087 பேரும் ஆவார்கள். அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயில் 521 பேர் இந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.  தெற்கு ரயில்வேயில் 12 பேர் மட்டுமே இந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்வில் தோல்வி அடைந்த 1,761 லோகோ பைலட்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 8 கோடியே 28 லட்சத்து 3 ஆயிரத்து 387 ப்ரீதலைசர் (ரத்தத்தில் ஆல்கஹால் இருப்பதை கண்டறியும் சோதனை) நடத்தப்பட்டது’ என்றார்.

The post பணி காலத்தில் மது அருந்திய விவகாரம் ஆல்கஹால் சோதனை தேர்வில் 1,761 லோகோ பைலட் தோல்வி: ரயில்வே அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister of Railways ,NEW DELHI ,Railway ,Minister ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு