×

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி: பாஜ நிர்வாகி கைது

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை, மேலக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). பா.ஜ.க மாவட்ட பொது செயலாளராக உள்ளார். இவர் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம், காலனி தெருவை சேர்ந்த அப்பாதுரை மனைவி சாந்தி(50) என்பவரிடம் அவரது மகன் ராம்குமாருக்கு கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2021ம் ஆண்டு பல தவணைகளாக ரூ.2,65,000 பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் வேலை வாங்கி தராததால் ராஜேந்திரனிடம் பலமுறை இது தொடர்பாக சாந்தி கேட்டுள்ளார்.

இதற்கு ராஜேந்திரன் சரியான பதில் சொல்லாமல் வேண்டுமென்றே மோசடி செய்யும் நோக்கத்தில் காலம் தாழ்த்தி வந்துள்ளார். வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்த ராஜேந்திரன் மீது சாந்தி மாவட்ட எஸ்பி ஜெயகுமாரை நேரில் சந்தித்து சாந்தி புகார் அளித்தார். அதனை தொடர்ந்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் நேற்று ராஜேந்திரன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இவர் இதுபோல் பலரிடமும் வேலை வாங்கிதருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி: பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Baja ,Muthuppettai ,Rajendran ,Muthuppettai, Thiruvarur district ,Pa. J. ,General Secretary ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் கோஷ்டிப்பூசல்...