×

குவைத் மன்னர் மறைவை ஒட்டி, இன்று நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் கடைப்பிடிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: குவைத் மன்னர் மறைவை ஒட்டி, இன்று நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் கடைப்பிடிப்பு என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று ஒருநாள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

குவைத் மன்னர் ஷேக் நவாப் அகமத் அல் சபா(86) நேற்று காலமானார். மன்னர் ஷேக் நவாக் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று மன்னர் ஷேக் நவாப் காலமானதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஷேக் சபா அல் அகமத் அல் சபா மறைவுக்கு பின், ஷேக் நவாப் மன்னரானார். தற்போது 83 வயதாக இருக்கும் ஷேக் மெஷல் அல் அகமத் அல் ஜாபர் குவைத் மன்னராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் குவைத் மன்னர் மறைவை ஒட்டி, இன்று நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் கடைப்பிடிப்பு என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது மறைவை ஒட்டி இன்று அரசு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது எனவும் தேசிய கொடி பறக்கவிடப்படும் கட்டிடங்களில், நாடு முழுவதும் இன்று ஒருநாள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post குவைத் மன்னர் மறைவை ஒட்டி, இன்று நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் கடைப்பிடிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kuwaiti ,Union ,Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை