×

ஜெம்புநாதபுரத்தில் மின் சிக்கன வாரவிழா

தா.பேட்டை, டிச.17: தமிழ்நாடு மின்சார வாரியம் திருச்சி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் உத்தரவின் பேரில், முசிறி கோட்ட பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் மேற்பார்வையில் ஜெம்புநாதபுரத்தில் மின் சிக்கன வார விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜம்புநாதபுரம் உதவி மின் பொறியாளர் ராஜா தலைமை வகித்தார். உதவி செயற் பொறியாளர் வெங்கடேசன் முன்னிலையில் களப்பணியாளர்கள், கடைகள், வீடுகள்தோறும் சென்று மின்சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும், மின்சாரம் வரும் வழியில் உள்ள மரங்களை வெட்டி மின்வாரியத்திற்கு உதவிட கேட்டு கொண்டனர். நிகழ்வில் மின்வாரியத்தினர் திரளாக கலந்து கொண்டு ஜெம்புநாதபுரம் பகுதியில் கடைகள் மற்றும் வீடுகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

The post ஜெம்புநாதபுரத்தில் மின் சிக்கன வாரவிழா appeared first on Dinakaran.

Tags : Energy Saving Week ,Jembunathapuram ,Tamil Nadu Electricity Board ,Trichy District ,Superintending Engineer ,Prakasam ,Musiri Divisional Engineer ,Dinakaran ,
× RELATED மின் இழுவை கம்பிகளில் கால்நடைகளை...