×

கலசபாக்கம் அருகே பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு: விரைவில் முதல் கட்ட பணிகள் தொடக்கம்

கலசபாக்கம், டிச.17: கலசபாக்கம் அருகே பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் ெதால்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்தார். கலசபாக்கம் அடுத்த காந்தப்பாளையம் ஊராட்சியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருவுடை நாயகி சமேத வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோயில் பல ஆண்டு காலமாக சிதிலமடைந்துள்ளது. பழமை வாய்ந்த திருத்தலத்தில் திருப்பணி மேற்கொள்ள தமிழக அரசு இந்து சமய அறநிலைய துறை மூலம் ₹61.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்க உள்ளன. தனுர் மாத உற்சவத்தின் போது உற்சவமூர்த்திகள் பர்வத மலையை கிரிவலம் வரும்போது முதல் நாள் இரவு இக்கோயிலில் தங்குவது வழக்கம். இதனைத் தொடர்ந்து மறுநாள் பர்வதமலை உற்சவமூர்த்திகள் கிரிவலம் வந்து கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலை சென்றடைவர்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி கலெக்டர் பா.முருகேஷ், எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், எஸ்பி கார்த்திகேயன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பக்தர்கள் கிரிவலம் வரும் 23 கிலோமீட்டர் தூரத்தை ஆய்வு செய்தனர். அப்போது இன்று நடைபெறும் தனுர் மாத உற்சவத்தில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. கலெக்டர் மற்றும் எம்எல்ஏ வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் பகுதியில் ஆய்வு செய்தபோது பழமையான கோயிலை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்கள் கோயில் திருப்பணி மேற்கொள்ள ₹61.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதிய அளவிற்கு நிதி இல்லாததால் கோயில் திருப்பணியை முழுமையாக செய்ய முடியாத நிலை உள்ளது. கோயிலின் பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

The post கலசபாக்கம் அருகே பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு: விரைவில் முதல் கட்ட பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Archeology department ,Velanthangeeswarar ,temple ,Kalasapakkam ,Vellanthankeeswarar temple ,Vellanthankeeswarar ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்