×

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்: அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

தூத்துக்குடி,டிச.17: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மாநில திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்து, 100 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி பேசுகையில் ‘‘திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு அனைத்துத்துறைகளிலும் முதல்வர் முக.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், ₹1000 மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த தொகை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும். காலை முதல் இரவு வரை விடாது பணி செய்பவர்கள் பெண்கள் தான். அதை கருத்தில் கொண்டு தான் வழங்கப்படுகிறது.

இதில் விடுபட்டு முறையிட்டவர்களுக்கும், தகுதியான அனைவருக்கும் ₹1000 வழங்கப்படும். கடந்த காலத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் போதும், தற்போது ஏற்பட்ட பாதிப்பின் போதும், அமைச்சர் உதயநிதி அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நலத்திட்டங்கள் வழங்கி அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் தான் ₹1000 வழங்கப்படுகிறது. வரும் 18ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோவையில் முதல்வர் துவக்கிவைக்கிறார். தூத்துக்குடி மாநகரில் 37 இடங்களில் விடுமுறை தவிர்த்து அடுத்த வருடம் ஜனவரி 6ம் தேதி வரை நடக்கிறது.

இதில், உங்களுக்கு தேவையான வீட்டுமனை பட்டா மற்றும் மாறுதல், குடிநீர் இணைப்பு, மின்கம்பம் உள்ளிட்ட பல்வேறு குறைகளை மனுக்கள் மூலமாக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் முகாமில் கொடுத்து அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம். இதை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களிடமும் இதை எடுத்துச் சொல்லுங்கள். அனைத்து பகுதிகளிலும் திமுகவினர், மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்து உதவிபுரிவார்கள்’’ என்றார். விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளர் ராம கிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, அவைத்தலைவர் செல்வராஜ், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோனி ஸ்டாலின், அன்பழகன், கவிதாதேவி, குபேர் இளம்பரிதி,

இலக்கிய அணி மாநகர அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், ராஜா, கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, சரவணக்குமார், விஜயக்குமார், வைதேகி, பவானி மார்ஷல், சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, விஜயலட்சுமி, அந்தோனி பிரகாஷ் மார்ஷல், தனலட்சுமி, தெய்வேந்திரன், இலக்கிய அணி மாநகர துணை அமைப்பாளர் பால்ராஜ், இளைஞரணி மாநகர துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், மனோ, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, ஆல்பட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்: அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. ,Stalin ,Minister ,Geethajeevan ,Thoothukudi ,Thoothukudi Assembly Constituency ,DMK ,Udayanidhi Stalin ,M.K. Stalin ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்