×

குடிநீர் சப்ளையில் கோளாறு பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம், டிச. 17: உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு கோட்டைமேடு பகுதியில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனையடுத்து உடனடியாக குடிநீர் தர வேண்டும் என்று பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பேரூராட்சி சார்பில் குடிநீர் திறந்துவிடப்பட்டது.இதில் சாக்கடை கலந்த குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து உத்தமபாளையம் கோட்டைமேடு சாலையில் பொதுமக்கள் காலி குடத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பேரூராட்சி அதிகாரிகள் சமாதானம் செய்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.

The post குடிநீர் சப்ளையில் கோளாறு பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam ,Ward ,Uttamapalayam Municipal Corporation ,Kotdamedu ,
× RELATED உத்தமபாளையம் வட்டாரத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்