×

ஐயப்ப பூஜை முன்னிட்டு அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பெரியகுளம், டிச. 17: பெரியகுளம் கம்பம் சாலையில் உள்ள காளியம்மன் கோயிலில் தினந்தோறும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்ப பஜனை பாடி பூஜை செய்து வருகின்றனர். நேற்று ஐயப்ப பஜனை முன்னிட்டு பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். காளியம்மனுக்கு அனைத்து அபிஷேகங்களும் செய்யப்பட்டு, ஐயப்ப படத்திற்கு சிறப்பாக அலங்காரம் செய்து சிறப்பு பஜனை நடைபெற்றது. இதல் 108 விளக்குகள் அமைத்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பெரியகுளம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post ஐயப்ப பூஜை முன்னிட்டு அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Thiruvilakku Puja ,Amman Temple ,Ayyappa Puja ,Periyakulam ,Ayyappa ,Kaliamman temple ,Periyakulam Gampam Road ,Thiruvilakku ,Puja ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை