×

இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று வாலிபர்கள் கைது

கூடலூர்,டிச.17: கூடலூரைச் சேர்ந்த கோபிநாதன் என்பவர் கடந்த மாதம் 19ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை கள்ளிக்கோட்டை சாலை நாடார் மண்டபம் பகுதியை ஒட்டி நிறுத்தி சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து கோபிநாதன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சப்.இன்ஸ்பெக்டர் கபில்தேவ் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணைக்கு பின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அம்பலகண்டி பகுதியைச் சேர்ந்த அஜ்மல்(19), மஞ்சேரி கருவேம்பரம் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம்(20), டிரிகலங்கோட் குறிஞ்சால் பகுதியைச் சேர்ந்த பாகித்(19) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

The post இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Gopinathan ,Kallikottai road ,Dinakaran ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...