×

அரசு மருத்துவர்கள் நியமனம் காலிப்பணியிடங்களை 1,752 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த மருத்துவர் பணியிடங்களின் எண்ணிக்கை 1021ஆக இருந்த போது, ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின், 14 மாதங்களானநிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 1752 ஆக அதிகரித்து விட்டது.

அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஏற்பட்டுள்ள காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும். அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் அளிக்கும். எனவே, கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.

The post அரசு மருத்துவர்கள் நியமனம் காலிப்பணியிடங்களை 1,752 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Anbumani ,CHENNAI ,PAMC ,President ,Tamil Nadu ,
× RELATED காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை...