×

அமித்ஷா மீது அவதூறு; ராகுலுக்கு சம்மன்

சுல்தான்பூர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக அவதூறாக சில கருத்துகளை கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது விஜய் மிஸ்ரா என்பவர் கடந்த 2018 ஆகஸ்ட் 4ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுல்தான்பூர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ்யாதவ் ராகுல்காந்தி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார். நேற்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜனவரி 6ம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

The post அமித்ஷா மீது அவதூறு; ராகுலுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Summons ,Rahul ,Sultanpur ,Former ,Congress ,president ,Rahul Gandhi ,Union Home Minister ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!