×

பாலார் குண்டு வெடிப்பில் வீரப்பனுக்கு உதவிய ஞானபிரகாசம் மரணம்

ஹனூர்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சந்தனபாள்யாவை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (70). 1993ம் ஆண்டு மலைமாதேஸ்வரன் மலையில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் பாலார் பாலத்தில் சந்தன மரகடத்தல் வீரப்பன் வைத்த வெடிகுண்டு சம்பவத்தில் 22 போலீசார் இறந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பம்பவத்தில் வீரப்பனுக்கு உதவியதாக ஞானபிரகாசம், சைமன், மாதய்யா, பிலவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 1997ம் ஆண்டு மைசூரு தடா நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு ஆயுள் தண்டனையாக குறைப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஞானபிரகாசத்துக்கு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், அவர் சொந்த ஊரான சந்தனபாள்யாவில் வசித்து வந்தார். இந்தநிலையில், உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் அவர் இறந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது.

The post பாலார் குண்டு வெடிப்பில் வீரப்பனுக்கு உதவிய ஞானபிரகாசம் மரணம் appeared first on Dinakaran.

Tags : Gnanprakasam ,Veerappan ,Balar ,Hanur ,Gnanaprakasam ,Chandanapalya, ,Hanur taluka, Samrajnagar district, Karnataka ,Malamadeswaran ,Bala ,
× RELATED 1,07,083 வாக்குகள் பெற்ற வித்யாராணி வீரப்பன்