×

குவைத் மன்னர் ஷேக் நவாப் மறைவு

துபாய்: குவைத் மன்னர் ஷேக் நவாப் அகமத் அல் சபா(86) நேற்று காலமானார். மன்னர் ஷேக் நவாக் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மன்னர் ஷேக் நவாப் காலமானதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு ஷேக் சபா அல் அகமத் அல் சபா மறைவுக்கு பின், ஷேக் நவாப் மன்னரானார். தற்போது 83வயதாக இருக்கும் ஷேக் மெஷல் அல் அகமத் அல் ஜாபர் குவைத் மன்னராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The post குவைத் மன்னர் ஷேக் நவாப் மறைவு appeared first on Dinakaran.

Tags : Sheikh Nawab ,King ,Kuwait ,Dubai ,Ahmed Al Sabah ,King Sheikh Nawak ,King Sheikh Nawab ,Dinakaran ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்