×

உக்ரைனில் பயங்கரம்; கவுன்சிலர்கள் கூட்டத்தில் குண்டு வீசிய கவுன்சிலர்: வீடியோ வைரல்

கீவ்: உக்ரைனில் ஊராட்சி மன்ற கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசி கவுன்சிலர் நடத்திய தாக்குதலில் 26 கவுன்சிலர்கள் படுகாயமடைந்தனர். உக்ரைனின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கெரெட்ஸ்கை கிராம சபை அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில் உள்ளூர் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் அனல் பறக்க விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில், உள்ளே வந்த கவுன்சிலர் ஒருவர், திடீரென தனது பையில் இருந்த 3 கையெறி குண்டுகளை சர்வ சாதாரணமாக வெளியில் எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாக கீழே தூக்கி போட்டார்.

சில நொடிகளில் அந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறி கூட்ட அரங்கே புகை மண்டலமாக மாறியது. இந்த சம்பவத்தில் 26 கவுன்சிலர்கள் படுகாயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்திய கவுன்சிலர் பலியாகி உள்ளார். இந்த சம்பவத்திற்கு தீவிரவாத தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரிக்கின்றனர். கவுன்சிலர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நேரடி காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

The post உக்ரைனில் பயங்கரம்; கவுன்சிலர்கள் கூட்டத்தில் குண்டு வீசிய கவுன்சிலர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kiev ,Ukraine ,Ukraine's… ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...