×

குவைத்தின் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானர்

குவைத்: குவைத்தின் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானர் என குவைத் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தனது சகோதரரான ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபா மறைவிற்கு பிறகு பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக குவைத் நாட்டை வழிநடத்தினார். ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் மறைவிற்கு பிறகு பட்டத்து இளவரசர், 83 வயதான ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, அடுத்த மன்னராக நியமிக்கபட்டார்.

ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் மறைவிற்கு குவைத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்கள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் நவாஃப் 2006 இல் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார் மற்றும் 2020 இல் அமீராக பொறுப்பேற்றார். 1937 இல் பிறந்த இவர், குவைத்தின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் ஐந்தாவது மகனாவார். 1990 இல் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்து, வளைகுடாப் போரின் தொடக்கத்தைத் தூண்டியபோது அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார், பின்னர் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.

The post குவைத்தின் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானர் appeared first on Dinakaran.

Tags : Emir Sheikh Nawaf al-Ahmad al-Jaber al-Sabha ,King ,Kuwait ,Emir Sheikh Nawaf Al-Ahmad Al-Jafar al-Saba ,Dinakaran ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்