×

2024 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பின் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: 2024ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்ரியில் ராணி அப்பாக்காவின் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கே பிரதமர் மோடி எப்போதும் நம்புவதால், மகளிர் மசோதா உண்மையாகிவிட்டது.

சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, அரசியலமைப்பு சட்டசபையில் பெண்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் சுதந்திரப் போராட்டத்தின் பழங்குடியின தலைவர்கள் ஆகிய மூன்று புத்தகங்களை வெளியிட அமர் சித்ர கதாவுடன் ஒன்றிய கலாசார அமைச்சகம் இணைந்துள்ளது.

2024ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கும்’ என்றார்.

The post 2024 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பின் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்: நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,NEW DELHI ,UNION GOVERNMENT ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...