×

இளைஞர்களுக்கு பாஸ் வழங்கியது தொடர்பாக பாஜக எம்.பி.பிரதாப் சிம்ஹாவுக்கு சம்மன் : வாக்குமூலத்தை பதிவு செய்ய டெல்லி போலீஸ் தீவிரம்!!

டெல்லி : நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பான விவகாரத்தில் பாஜக எம்.பி. பிரதாம் சிம்ஹாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டிச.13-ல் நாடாளுமன்றத்தில் 2 இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த சாகர் ஷர்மா, மனோ ரஞ்சன் ஆகியோருக்கு மைசூர் தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவிடம் பாஸ் பெற்றது தெரிய வந்தது.

இதையடுத்து புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் மக்களவைக்குள் புகுந்த நபர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், இளைஞர்களுக்கு பாஸ் வழங்கிய விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி.பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவரது விளக்கங்கள் என்ன?, இளைஞர்களுக்கு எதன் அடிப்படையில் பாஸ் வழங்கப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை பதிவு செய்ய டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது. பாஜக எம்பி, அவரது தனி உதவியாளர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

The post இளைஞர்களுக்கு பாஸ் வழங்கியது தொடர்பாக பாஜக எம்.பி.பிரதாப் சிம்ஹாவுக்கு சம்மன் : வாக்குமூலத்தை பதிவு செய்ய டெல்லி போலீஸ் தீவிரம்!! appeared first on Dinakaran.

Tags : BJP ,B. Summon ,Pratap Simha ,Delhi Police ,Delhi ,B. Samman ,Pradham Simha ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர்...