×

உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் 3,4 நாட்களில் குணமாகி வருகின்றனர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : சென்னை வேளச்சேரியில் நடைபெறும் வாராந்திர மழைக்கால மருத்துவ சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்ட பின்பு மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களில் 8வது மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.கடந்த 7 வாரங்களில் இதுவரை 16,516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அனைத்து முகாம்களில் 9 மாதம் – 15 வயதுடைய சிறார்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. பல்வேறு உருமாற்றங்களை தொடர்ந்து சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் 3,4 நாட்களில் குணமாகி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆர்டி -பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தற்போது பரவும் புதிய தொற்று எந்த வகையானது என்பது பற்றி ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் தெரியப்படுத்தப்படும். சபரிமலை செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் 3,4 நாட்களில் குணமாகி வருகின்றனர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma ,Chennai ,Department of Medical Affairs ,Department of Medicine ,Weekly ,Rainy Medical Specialty Camp ,Velacheri, Chennai ,Ma. Subramanian ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...