×

அரசியலில் பெண்கள் இருப்பதே சவால் தான்.. எத்தனை தடைகள், பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு செயல்படுவேன்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!!

சென்னை: 2011 தேர்தலுக்கு பிறகு சந்தித்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல் ஏற்பட்டது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய கட்சியின் தலைவர் விஜயகாந்தும் பங்கேற்றார். பிரேமலதா விஜயகாந்திற்கு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இதையடுத்து தனக்கு வாழ்த்துத் தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி கூறி பொதுச் செயலாளராக தனது முதல் அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தேமுதிக பொதுச்செயலாளர் தேர்வு அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அரசியல் இயக்கப் பணிகளில் விஜயகாந்த் உடன் தொடக்கத்தில் இருந்தே பயணித்து வருகிறேன். தொண்டர்கள் மீதான நம்பிக்கை உடன் பயணத்தை தொடர்ந்து வருகிறோம். விஜிகாந்த்தின் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும். 2011 தேர்தலுக்கு பிறகு சந்தித்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல் ஏற்பட்டது என்று பிரேமலதா கூறியுள்ளார்.

துரோகங்களால் விஜயகாந்திற்கு பாதிப்பு: பிரேமலதா
துரோகத்தால் ஏற்பட்ட மன உளைச்சலே விஜயகாந்த் உடல்நலக்குறைவுக்கு மிக முக்கிய காரணம். விஜயகாந்த் உடல்நிலை குறைவால் தேமுதிகவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புகளையும், சவால்களை சந்தித்து எதிர்நீச்சல் போட்டு வந்துள்ளோம். மிகப் பெரிய வலிகளை நானும், விஜயகாந்தும் எதிர்கொண்டோம் ஏ என்று அவர் கூறினார்.

அரசியலில் பெண்கள் இருப்பதே சவால் தான்: பிரேமலதா
அரசியலில் இருப்பதே சவால் தான். குறிப்பாக பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால். அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சாவல் அதற்கு உதாரணம் ஜெயலலிதா என்று கூறியுள்ளார். அரசியலில் பெண்களுக்கு சவால்கள் அதிகம்; எத்தனை தடைகள், பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு செயல்படுவேன். இனி வரும் களங்களில் வெற்றி வியூகம் மட்டுமே என்று பிரேமலதா தெரிவித்தார்.

The post அரசியலில் பெண்கள் இருப்பதே சவால் தான்.. எத்தனை தடைகள், பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு செயல்படுவேன்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Temutika General Secretary ,Premalatha ,Chennai ,Demutika Secretary General ,Premalatha Vijayakanth ,2011 elections ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...