×

வெற்றி தினம் துணிச்சலான நெஞ்சங்களுக்கு தலைவணங்குகிறேன்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி: ஆயுதப் படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் 1971 போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ மாளிகையில் நேற்று நடந்த ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று வெற்றி தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு தலைவணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, 1971 போரின் போது நமது ஆயுதப் படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இணையற்ற துணிச்சலை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு விஜய் திவாஸ் அன்று தலைவணங்குகிறேன் என்று திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

The post வெற்றி தினம் துணிச்சலான நெஞ்சங்களுக்கு தலைவணங்குகிறேன்: ஜனாதிபதி திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : Victory Day ,President ,Thravupathi Murmu ,New Delhi ,Tirupati Murmu ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்