×

தங்கள் நாட்டு பிணைக்கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்: எதிரிகள் என்ற அச்சத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விளக்கம்!!

காசா: தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 3பேரை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம், எதிரிகள் என்ற அச்சத்தில் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹமாஸ் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகள், தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாமல் தவறுதலாக 3 பேரை சுட்டுக்கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் வருத்தம் தெரிவித்தது. நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பிணை கைதிகள் உயிரிழந்தது தாங்க முடியாத சோகம் என்று இஸ்ரேல் பிரதமர் மெஞ்சமின் நெதன்யாகு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். காசாவில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலின்போது அந்தச் சம்பவம் நடந்ததாக ராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர். சுடப்பட்ட 3பேரும் கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து தப்பியிருக்கலாம் அல்லது கைவிடப்பட்டிருக்கலாம். எனவே சம்பவம் தொடர்பாக வெளிப்படையாக விசாரிக்கப்படும் என்று இஸ்ரேலிய ராணுவம் உறுதியளித்துள்ளது.

The post தங்கள் நாட்டு பிணைக்கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்: எதிரிகள் என்ற அச்சத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...