×

பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் அதிரடி

திருச்சி, டிச.16: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார். கடந்த 5.11.23 அன்று கோட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில் தள்ளு வண்டியில் கொய்யாப்பழம் விற்று வந்த வியாபாரியிடம் மது அருந்த பணம் கேட்டு, கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி, ₹780 ரொக்கத்தை பறித்துக்கொண்டும், மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பற்ற வைத்து தள்ளுவண்டி மீது வீசி விட்டு 3 பேராக தப்பி சென்றதாக புகார் பெறப்பட்டது. விசாரணையில் சிந்தாமணி வெனீஸ் தெருவை சோ்ந்த அபிஷேக் (எ) அபி (20), சுபாஷ், குரு ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேர் மீதும் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேல் விசாரணையில் அபிஷேக் (எ) அபி மீது கோட்டை போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவரது தொடா் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கோட்டை இன்ஸ்பெக்டர் அளித்த அறிக்கையை பரிசீலித்த போலீஸ் கமிஷனர் காமினி அபிஷேக் (எ) அபியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அபி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அபியிடம் சார்வு செய்தனர். திருச்சி மாநகரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சாித்துள்ளார்.

The post பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Goondas ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் பிரம்பை...