×

வழுத்தூர் ஊராட்சியில் புதிய பள்ளிவாசல் திறப்புவிழா

கும்பகோணம், டிச.16: கும்பகோணம் அருகே வழுத்தூர் ஊராட்சியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வழுத்தூர் ஊராட்சி, அஜ்லான்ஷா நகரில் ஆயிஷா இப்ராஹிம் ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

துபாய் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான சேக்அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேலூரை சேர்ந்த அரபிக் கல்லூரியின் முதல்வர் அப்துல் ஹமீத் புதிய பள்ளிவாசலை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசினார். திண்டுக்கல் அரபி கல்லூரி முதல்வர் முஹம்மது அலி பள்ளிவாசலில் முதல் தொழுகையை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஜும்மா சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் வழுத்தூர் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்களும், ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

The post வழுத்தூர் ஊராட்சியில் புதிய பள்ளிவாசல் திறப்புவிழா appeared first on Dinakaran.

Tags : Vaghtur Panchayat ,Kumbakonam ,Vachthur panchayat ,Muslims ,
× RELATED கும்பகோணத்தில் 230 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!