×

குளித்தலை அருகே சாலை, பாலம் அமைக்கும் பணிகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குளித்தலை, டிச. 16: நங்கவரம் பனையூர் காட்டுவாரியின் குறுக்கே புதிய பாலங்கள், தென்கடை குறிச்சி ஒத்தக்கடை முதல் சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டி வரை சாலை பணி எம்.எல்.ஏ.மாணிக்கம் தொடங்கிவைத்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த நங்கவரம் பேரூராட்சி பகுதியில் இருந்து வாரி கரை கவுண்டம்பட்டி ஒத்தக்கடை கவுண்டம்பட்டி சூரியனூர் வழியாக திருச்சி உறையூர் வரை செல்லும் சாலை உள்ளது. தினமும் ஏராளமான பள்ளி வாகனங்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகரபேருந்துகள் மினிபேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகிறது. இந்நிலையில் நங்கவரம் மற்றும் பனையூர் காட்டுவாரி குறுக்கே குறுகிய பலமாக இருப்பதால் வாகனங்கள் பெருகிவரும் சூழ்நிலையில் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். அதேபோல் கவுண்டம்பட்டி ஒத்தக்கடை முதல் சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டி வரை குறுகிய சாலையை அகலப்படுத்த வேண்டும் என எம்.எல்.ஏ. மாணிக்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கை ஏற்று எம்எல்ஏ மாணிக்கம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அ.வா.வேலுவை சந்தித்து நங்கவரம் பகுதி மக்கள் விவசாயிகள் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்று நங்கவரம் அரசு உதவி பெறும் பள்ளி அருகில் நங்கம் காட்டுவாதியின் குறுக்கே புதியபாலம் அமைக்க ரூ.2 கோடியே 74 லட்சத்து 42 ஆயிரம் மற்றும் கவுண்டம்பட்டி முத்து வீடு அருகில் பனையூர் காட்டுவாரியின் குறுக்கே புதிய பாலம் அமைக்க ஒரு கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம், தென்கடை குறிச்சி ஒத்தக்கடை முதல் சூரியனூர் ஒரு ஊராட்சி மேலப்பட்டி வரை சாலை அகலப்படுத்தும் பணி புதிய பாலங்கள் கட்டுதல் பணிக்கு ரூ.4 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை வகித்தார். இதில் 2காட்டுவாரி பாலங்கள், 3 கிலோ மீட்டர் தார்ச்சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கிவைத்தார். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி செயல் பொறியாளர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் சந்திரமோகன், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றியபொறுப்பாளர் தியாகராஜன், நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, நங்கவரம் நகரச்செயலாளர் முத்து (எ,)சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குளித்தலை அருகே சாலை, பாலம் அமைக்கும் பணிகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nangavaram Panayur forest ,Othakada ,Suryanur Uradashi ,Dinakaran ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு