×

கடலாடி ஒன்றியத்தில் புதிய பஞ்சாயத்து அலுவலகம் காணொலியில் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

 

சாயல்குடி, டிச. 16: கடலாடி ஒன்றியத்தில் 2 ஒருங்கிணைந்த பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். கடலாடி ஒன்றியம், ஏனாதி மற்றும் மங்களம் பஞ்சாயத்தில் தலா ரூ.19.78 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த பஞ்சாயத்து அலுவலகம் கட்டிடம் புதியதாக கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார். ஏனாதி பஞ்சாயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கடலாடி பிடிஓகள் ராஜா, ஜெயஆனந்த் முன்னிலை வகித்தனர்.

பஞ்சாயத்து தலைவர் பாரதிராஜா வரவேற்றார். மங்களத்தில் நடந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் வில்வக்கனி வரவேற்றார். அலுவலக கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூறு நாள் வேலை திட்ட துணை பிடிஓ ஆனந்தகுமார், பஞ்சாயத்து செயலர்கள் பிரவணநாதன், சவுந்திரபாண்டியன் மற்றும் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏனாதியில் ரூ. 9.08 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

The post கடலாடி ஒன்றியத்தில் புதிய பஞ்சாயத்து அலுவலகம் காணொலியில் தமிழக முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister of Tamil Nadu ,Kudaladi Union ,Sayalkudi ,Chief Minister ,M.K.Stalin ,Cuddaly Union ,Tamil Nadu ,Panchayat ,Dinakaran ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...