×

திருமங்கலத்தில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

 

திருமங்கலம், டிச.16: மார்கழி மாதத்தினையொட்டி, திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நாளை (டிச.17) முதல் ஜனவரி 15ம் தேதி வரை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை (டிச. 17) மார்கழி மாதம் பிறக்கிறது. இதனையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மார்கழி மாத்தினையொட்டி கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோயிலில் தினசரி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு அடைப்பது வழக்கம்.

மார்கழி மாதத்தினையொட்டி நாளை முதல் ஜனவரி 15ம் தேதி தைப்பொங்கல் வரை தினசரி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். இதையடுத்து நண்பகல் 11 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். மார்கழி மாதத்தினையொட்டி மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது என கோயில் தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி அங்கையர்கண்ணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

The post திருமங்கலத்தில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Meenakshiyamman temple ,Thirumangalam ,Tirumangalam ,Margazhi month ,Meenakshi Sokkanathar Temple ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்