×

சமூக நலத்துறை சார்பில் பெண்கள் மேம்பாட்டிற்கு தொழில் முனைவு பயிற்சி

 

மதுரை, டிச. 16: தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கான “பெண்கள் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு” குறித்த பயிற்சி மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் 3 நாட்கள் நடத்தப்பட்டது. இச்சங்கங்களின் பெண் உறுப்பினர்கள் பள்ளி சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பணி இல்லாத காலங்களில் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், சிறு தொழில் மற்றும் வியாபாரம் தொடங்குவதற்கான வகையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. மிக குறைந்த முதலீட்டில் பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் இப்பயிற்சி அமைந்திருந்தது. இதன்படி பினாயில், அகல் விளக்கு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் தயாரிப்பது மற்றும் சிறு தானிய மதிப்பீடு கூட்டல் குறித்தும் செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை சின்னஉடைப்பில் இயங்கி வரும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் தர்மராஜ், காந்தி மியூசிய பயிற்றுநர் நடராஜன் மற்றும் ரூட்செட் நிறுவனத்தின் பயிற்றுநர் தேவராஜ் செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்தனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த பயிற்சியின் வாயிலாக பயனடைந்தனர்.

The post சமூக நலத்துறை சார்பில் பெண்கள் மேம்பாட்டிற்கு தொழில் முனைவு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Women's Sewing Industry Cooperative ,Social Welfare Department ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...