×

யோகாவில் மாஜி ராணுவ வீரர் கின்னஸ் சாதனை: கலெக்டர், போலீஸ் கமிஷனர் பாராட்டு

 

கோவை, டிச.12: கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் சேதுராம் குமார் (44). இவர், இந்திய ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது மதுக்கரை மாரிச்செட்டி பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் யோகாசனத்தில் உள்ள பர்வத் ஆசனா செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். இது குறித்து சேதுராம் கூறியதாவது: கடந்த 2022ம் ஆண்டு யோகசனத்தில் உள்ள பர்வத் ஆசனாவை 1 மணி நேரம் 2 நிமிடம் 3 வினாடிகள் செய்து புதிய கின்னஸ் சாதனை செய்தேன். பூனே மாவட்டத்தை சேர்ந்த ப்ரத்திக்‌ஷா என்பவர் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் 20 வினாடிகள் செய்து எனது கின்னஸ் சாதனை முறியடித்தார்.

நான் கடந்த ஜூன் 26ம் தேதி இதே ஆசனத்தை 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 38 வினாடிகள் செய்து ப்ரத்திக்‌ஷா சாதனையை முறியடித்தேன். எனது இந்த சாதனையை கின்னஸ் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கிகரித்து அதற்கான் சான்றிதழை எனக்கு வழங்கியுள்ளது. இந்த சான்றிதழை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் எனக்கு வழங்கினர். இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் ‘க்ராப் வாக்’ எனப்படும் நண்டு நடையை தொடர்ந்து 3 மணி நேரம் செய்து மேலும் ஒரு கின்னஸ் சாதனை செய்யவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post யோகாவில் மாஜி ராணுவ வீரர் கின்னஸ் சாதனை: கலெக்டர், போலீஸ் கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Guinness ,KOWAI ,SEDURAM KUMAR ,RUGORE AREA ,Indian Army ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை நடமாட்டம்..!!