×

காதணி விழாவில் சிறுவனின் செயின் திருடிய இளநீர் வியாபாரி கைது

ஆரணி, டிச.16: ஆரணி சைதாப்பேட்டை முள்ளிப்பட்டு ரோட்டு தெருவை சேர்ந்தவர் கோபி(35), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி சுபா. இவர்களுக்கு மகள் கீர்த்தி(5), மகன் மோகித்(3). உள்ளனர். இரு குழந்தைகளுக்கும் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காதணி விழா நடந்தது. அப்போது, அங்கு இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆரணி அடுத்த நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(40), திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கு இளநீர் கொடுத்துள்ளார்.

பின்னர், விழா முடிந்ததும் குழந்தை மோகித் விளையாடி கொண்டிருந்தபோது, இளநீர் வியாபாரி ரமேஷ், மோகித்தை தனி அறைக்கு தூக்கிச்சென்று, அவரது கழுத்தில் இருந்த 4 கிராம் தங்கச்செயினை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டாராம். சிறிது நேரத்தில் கோபி தனது மகன் கழுத்தில் இருந்த செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, இளநீர் வியாபாரி ரமேஷ் குழந்தையின் செயினை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து ரமேஷை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post காதணி விழாவில் சிறுவனின் செயின் திருடிய இளநீர் வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Kathani festival ,Arani ,Gopi ,Muldu Road Street ,Arani Saidappet ,Suba ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு