×

வல்லநாட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

செய்துங்கநல்லூர், டிச.16: நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாடு பேருந்து நிறுத்தத்தில் சாம்பல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நேற்று மாலை சாம்பல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நெல்லையில் உள்ள சிமென்ட் ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.வல்லநாடு மெயின் பஜாரில் டேங்கர் லாரி வந்தபோது திடீரென பக்கவாட்டு சுவரில் மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே வல்லநாடு பஜாரில் நின்றவர்கள் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 வாகனம் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஹைவே பேட்ரோல் போலீசார் வல்லநாடு மெயின்பஜாரில் இருந்த தடுப்பு வேலியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். சாம்பல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வல்லநாடு மெயின் பஜார் சாலையில் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post வல்லநாட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Vallanath ,Karinganallur ,Vallannadu ,Nellai-Tuticorin National Highway ,Dinakaran ,
× RELATED கீழ வல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளி...