×

குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க கோரி ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்

 

ஈரோடு,டிச.16: குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க கோரி ஈரோடு அரசு மருத்துவமனை ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு நிலுவை தொகையுடன் உடனடியாக வேண்டும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட 132 ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரவிடுமுறை, தேசிய, பண்டிகை நாட்கள் விடுமுறை, சட்டப்படியான 20 நாட்களுக்கு ஒருநாள் வீதம் வழங்கப்பட வேண்டிய ஈட்டிய விடுப்பு, மாதத்திற்கு ஒருநாள் தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸாக குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்ட உறுப்பினர் அட்டை முறையாக வழங்கப்பட வேண்டும், சம்பள விபர பட்டியலையும், மாத வருகைப்பதிவு விபரத்தையும் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் நேற்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் தூய்மை பணிகள் மற்றும் பாதுகாவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

The post குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க கோரி ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Erode Govt Hospital ,Erode ,Erode Government Hospital ,Dinakaran ,
× RELATED சாலையில் மயங்கி கிடந்தவர் பலி