×

பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

 

சென்னை: பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே, எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை பழுது நீக்கம் மற்றும் சுத்தம் செய்வது போன்ற பணிகள் பேசின் பிரிட்ஜ் பணிமனையில் செய்யப்படுகிறது.

வழக்கமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறங்கிய பிறகு, ரயில் பெட்டிகளை இங்கு கொண்டு வந்து பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணி செய்து முடித்து மீண்டும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் பெட்டிகள் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி, நேற்று மாலை ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியை (எண் 204420) பேசின் பிரிட்ஜ் பணிமனையிலிருந்து ஒரு டிராக்கில் இருந்து மற்றொரு டிராக்குக்கு கொண்டு சென்றபோது திடீரென அந்த பெட்டி தடம் புரண்டு, 4 சக்கரங்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பவில்லை. தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தடம் புரண்ட ரயில் பெட்டியை, மீண்டும் தண்டவாளத்தில் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ரயில் பெட்டி தண்டவாளத்தில் வைக்கப்பட்டு மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் பேசின் பிரிட்ஜ் பணிமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

The post பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Tags : Basin Bridge Workshop ,Chennai ,Basin Bridge ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...