×

திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியான காஜி பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர் அறிக்கை

 

திருவள்ளூர்: இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக திருவள்ளூர் மாவட்ட காஜி நியமனம் செய்வதற்கு வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக காஜி நியமனம் செய்வதற்காக கலெக்டர் தலைவராகவும், 5 உலமாக்கள், 2 இஸ்லாமிய முக்கியஸ்தர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட மாவட்ட அளவிலான காஜி தேர்வு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஜியாக பதவியேற்க இருப்பவர் இஸ்லாமிய சட்டவியலில் நிபுணத்துவமிக்க ஆலிம் அங்கீகரிக்கப்பட்ட அரபு கல்லூரி அல்லது நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிந்த நபர்களில் 3 நபர்களுக்கு குறையாமல் தேர்ந்தெடுத்து பெயர் பட்டியலை, அரசுக்கு பரிந்துரைக்கலாம். இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து காஜி சட்ட விதிமுறை மூலம் தகுதியான நபரை காஜியாக அரசு நியமனம் செய்யும்.

இந்த மாவட்டத்தில் தேர்வு குழுவால் நியமனம் செய்த திருவள்ளூர் மாவட்ட காஜி யு.மொகமதுஅலி என்பவரின் பதவி காலம் கடந்த 6.11.2023ல் முடிவடைந்தது. அதனால் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்பும் வகையில் தற்போது புதிய காஜி நியமனம் செய்வதற்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். இதன் படி விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய சுயவிவர குறிப்புகள், கல்வி சான்றிதழ்கள் ஆகிய விவரங்களுடன் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியான காஜி பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Qazi ,Tiruvallur District ,Tiruvallur ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்