×

ராபி பருவ பயிரை காப்பீடு செய்ய விழிப்புணர்வு பிரசாரம்

ஊத்தங்கரை, டிச.16: ஊத்தங்கரையில், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், ராபி பருவ பயிரை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் பிரபாவதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி வேளாண் அலுவலர் தமிழரசன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, ஊத்தங்கரை, வெள்ளிசந்தையில் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், ராபி பருவ நிலக்கடலை, நெல் ஆகியவற்றை காப்பீடு செய்ய வேண்டும் என்றனர். நெல்லுக்கு ஏக்கருக்கு ₹550 பிரீமியமும், நிலக்கடலைக்கு ₹311 பிரீமியம் செலுத்தி பயிர்களை காப்பீடு செய்வதன் மூலம், இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் போது, விவசாயிகளுக்கு நெல்லுக்கு ₹36,700, நிலக்கடலைக்கு ₹20,750 இழப்பீடு தொகை கிடைக்கும் என தெரிவித்தனர்.

The post ராபி பருவ பயிரை காப்பீடு செய்ய விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Triuntia ,Prime ,Dinakaran ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு