×

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி, டிச.16: பாலக்கோடு அருகே தண்டுகாரனஅள்ளி கிராமத்தில் ஊர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழா 14ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், வேதபாராயணம் நடந்தது. இதைதொடர்ந்து யாக சாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்தம் மற்றும் பால்குடத்தை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.

பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனிதநீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் கோபூஜை, பிம்பதரிசனம், மகா மங்களாரத்தி, தீர்த்தபிரசாத விநியோகம் செய்து, ஊர் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தண்டுகாரனஅள்ளி ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

The post மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Mariyamman Temple Kumbapisheka Festival ,Dharmapuri ,Mariyamman Temple Kumbaphishek ,Dandukaranaalli village ,Palakod ,Kumbabhishek Festival ,Maryamman Temple Kumbapisheka Festival ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...