×

1.75 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு

பென்னாகரம், டிச.16: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகளின் உற்பத்தியை அதிகரிக்க 1.75 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது. தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் நாட்டின மீன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு தர்மபுரி மீன்வள உதவி இயக்குநர் கோகுலரமணன் தலைமை வகித்தார். பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி மற்றும் தர்மபுரி கோட்டாட்சியர் கீதா ராணி ஆகியோர் கலந்து கொண்டு, ஒகேனக்கல் முதலைப் பண்ணை பகுதியில் நாட்டின மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல்கெண்டை, கல்பாசு உள்ளிட்ட 1.75 லட்சம் மீன் குஞ்சுகளை காவிரி ஆற்றில் விட்டனர். இந்நிகழ்ச்சியில், மீன்வள உதவி இயக்குநர்கள் உமா கலைச்செல்வி (மேட்டூர்), யுவராஜ் (கிருஷ்ணகிரி), தர்மபுரி மண்டல மீன்வள துணை இயக்குநர் சுப்பிரமணி, மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி, கவிதா, சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள மேற்பார்வையாளர்கள் குமரவேல் பெருமாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post 1.75 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு appeared first on Dinakaran.

Tags : Bennagaram ,Okanagan Cauvery river ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது