×

மும்பை இந்தியன்சுக்கு கேப்டன் ஹர்திக்

மும்பை: ஐச்பிஎல் தொடரின் 2024 சீசனில் களமிறங்க உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருந்த நிலையில், அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2 சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக், ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்ததுடன், கடந்த சீசனிலும் பைனல் வரை முன்னேறி 2வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று அபார சாதனை படைத்த ரோகித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி திடீரென பறிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மும்பை இந்தியன்சுக்கான ரோகித் ஷர்மா தொடர்ந்து விளையாடுவார் எனவும் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மும்பை இந்தியன்சுக்கு கேப்டன் ஹர்திக் appeared first on Dinakaran.

Tags : Hardik ,Mumbai Indians ,Mumbai ,Hardik Pandya ,IPL ,Dinakaran ,
× RELATED பிளே ஆப் வாய்பை தக்க வைக்க கொல்கத்தாவை வெல்லுமா மும்பை