×

இதுதான் பாஜவின் நாடாளுமன்ற மரபு: பாஸ் கொடுத்த எம்பி உள்ளே.! கேள்வி கேட்ட நாங்கள் வெளியே.: மதுரை எம்பி கண்டனம்

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிகள் கைகளில் கண்டன பதாகைகளுடன் நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்தும் படங்களை வெளியிட்டு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நாடாளுமன்றத்தில் கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜ எம்பி அவைக்குள்ளே.

பாதுகாப்பின்மைக்கு காரணம் யார் என கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! அவையில் மட்டுமல்ல… பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால், பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பி வைத்து அவைக்கு பெருமை சேர்க்கலாம். இது தான் பாஜகவின் நாடாளுமன்ற மரபு’’ என்று தெரிவித்துள்ளார்.

The post இதுதான் பாஜவின் நாடாளுமன்ற மரபு: பாஸ் கொடுத்த எம்பி உள்ளே.! கேள்வி கேட்ட நாங்கள் வெளியே.: மதுரை எம்பி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Madurai ,Madurai Lok Sabha ,S.Venkatesan ,
× RELATED பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான்...