×

மகாராஷ்டிராவில் 2 நக்சல்கள் சுட்டுக் கொலை

கட்சிரோலி: சட்டீஸ்கர் – மகாராஷ்டிரா மாநில எல்லையின் கோதல்வாஹி சாவடி அருகேயுள்ள போதின்தொலா பகுதியில் போலீசார் மீது தாக்குதல் நடத்துவதற்காக நக்சல்கள், குறிப்பிட்ட பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, போலீசார் மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் இரு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதில் ஒருவர் ஜம்பூல்கேதாவில் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய நக்சல் அமைப்பின் துணை தளபதி துர்கேஷ் வாத்தி ஆவார். சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் துர்கேஷ் வாத்தி மற்றும் மற்றொரு நக்சலின் உடல் கைப்பற்றப்பட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

The post மகாராஷ்டிராவில் 2 நக்சல்கள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Katsiroli ,Chhattisgarh ,Bodindola ,Kotalwahi ,
× RELATED தடை செய்யுங்கள், ஜனநாயகத்தை...