×

தேயிலை தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு: தொழிலாளர்கள் அலறி ஓட்டம்

நீலகிரி: பந்தலூர் அருகே அரசு தேயிலை தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை பார்த்த பெண் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் (டேன்டீ) சரகம் 3 பகுதியில் நேற்று பெண் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து டேன்டீ நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 15 அடிநீள மலைப்பாம்பை போராடி பிடித்தனர். பின்னர் கோட்டமலை அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பை விடுவித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

The post தேயிலை தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு: தொழிலாளர்கள் அலறி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Python ,Nilgiris ,Bandalur ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம்