×

சீர்மரபினர் நல வாரிய துணை தலைவராக இராசா.அருண்மொழி நியமனம்: 13 உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனர்

சென்னை: தமிழக அரசின் சீர்மரபினர் நல வாரியம் துணை தலைவராக இராசா.அருண்மொழி, 13 உறுப்பினர்கள் பதவியேற்றனர்.சீர்மரபினர் வகுப்பினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக ”சீர்மரபினர் நல வாரியம்” 2007ம் ஆண்டில் அரசால் அமைக்கப்பட்டது. இதில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டங்கள் போன்று விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன.

தற்போது, சீர்மரபினர் நல வாரியம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், துணை தலைவராக இராசா.அருண்மொழி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கே.எஸ்.ராஜ்கவுண்டர், சேகர், பசுவை சக்திவேல், முனுசாமி, எஸ்.கணேசன், கே.எஸ். கண்ணன், கதிர்வேல், பண்ணப்பட்டி கோவிந்தராஜ், ப.சந்திரன், சூர்யா பி.தங்கராஜா, பெரி.துரைராசு, பாண்டீஸ்வரி, பெரியசாமி ஆகிய 13 அரசு சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்தது.

இந்நிலையில் துணை தலைவராக நியமிக்கப்பட்ட இராசா.அருண்மொழி முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். இதே போல 13 உறுப்பினர்களும் பொறுப்பேற்று கொண்டனர். துணை தலைவராக பொறுப்பேற்று கொண்ட இராசா. அருண்மொழி, விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளராக பதவி வகித்துள்ளார்.

The post சீர்மரபினர் நல வாரிய துணை தலைவராக இராசா.அருண்மொழி நியமனம்: 13 உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனர் appeared first on Dinakaran.

Tags : Raza Arunmozhi ,Deputy Chairman ,Seermarapinar Welfare Board ,Chennai ,Raza.Arunmozhi ,Vice Chairman ,Tamil Nadu government ,Welfare Board ,Senior Citizens ,
× RELATED சீர்மரபினருக்கு ஒற்றை சான்றிதழ்...