×

ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதற்கான மீட்பு பணி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு துரிதமாக . கனமழை காரணமாக பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதனால் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டு இருந்தது. இதையடுத்து நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் சென்னையில் நியாயவிலைக் கடைகள் மூலம் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

The post ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Velacheri Ashtalakshmi, Chennai ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,M.U. ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...