×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பிப்ரவரி 4ம் தேதி ரிலீசாகிறது

ெசன்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படம், வரும் பிப்ரவரி 4ம் தேதி ரிலீசாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம், ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், புகழ் உள்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ரிலீசாகிறது. இதையடுத்து சூர்யா ரசிகர்கள் பெரிதும் மகிழ்ந்து, இந்த டிவிட்டை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.  …

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பிப்ரவரி 4ம் தேதி ரிலீசாகிறது appeared first on Dinakaran.

Tags : Sun Pictures ,Suriya ,Sun Pictures' ,
× RELATED சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக...