×

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்

சென்னை: திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்சியை தலைமை இடமாக கொண்ட பிரணவ் ஜூவல்லரி சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்தது. இந்த கடைகளுக்கு திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக உள்ளனர். இக்கடையில் நகைச்சீட்டுகள் மற்றும் முதலீட்டு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் 100 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், கடந்த அக்டோபர் 19-ம் தேதி அந்தக் கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத சுமார் ரூ.23.70 லட்சம் மற்றும் 11.60 கிலோ தங்கதை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இதனை தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர்கள் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 2 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மதன் செல்வராஜ் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, டிசம்பர் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் பிரகாஷ் ராஜ் விளம்பரத்தில் மட்டுமே நடித்ததும், அவருக்கும் இந்த நிறுவனத்தின் முதலீடு, மோசடியில் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டுமே நடித்ததாகவும், நிறுவனத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Prakashraj ,Chennai ,Crime Police ,Trishi ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு